Monday 21 July 2014

Dawn of the Planet of the Apes - சினிமா விமர்சனம்


கொமாரபாளையம் கௌரி தியேட்டர் 11.7.14 ரிலீஸ்

                            நம் எம்.ஜி.ஆர் பட கதைதான் அதை இன்றைய நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப்ப மாற்றி புதிய விருந்து படைத்திருக்கிறார்கள்

                           மனித குலம் வைரஸ் நோயாள் பாதிக்கப்பட்டு அழிந்து கொண்டிருக்கும் பொழுது அதில் தப்பி பிழைத்தவர்கள் ஓர் இடத்திலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள காட்டில் போன பாகத்தில் தப்பி சென்ற சீசர் அவனது குடும்பம் மற்றும் அவனது கூட்டாளிகள் அனைவரும் உள்ளனர்.

                           அந்த காட்டிற்குள் இருக்கும் ஓர் அணையில்தான் மின்சாரம் தயாரிக்கும் இடம் இறுக்கிறது. அதை இயங்க செய்தால்தான் நகருக்குள் இருக்கும் மனிதர்களுக்கு மின்சாரம் கிடைக்கும்.

                        அதற்காக கதாநாயகன் காட்டிற்குள் சென்று சீசரிடம் பேசி சம்மதம் வாங்கி அந்த அணையை இயக்கும் வேளையை தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆரம்பிக்கிறான்.

                        சீசரின இந்த செயலை வெறுக்கும் அவனது கூட்டாளி கோபா நகருக்குள் சென்று துப்பாக்கி ஒன்றை கைப்பற்றி அதை வைத்து சீசரை சுட்டுவிட்டு மனிதர்கள் தான் சுட்டார்கள் நாம் அவர்களை பழித்தீர்ப்போம் என்று மற்று ஏப்ஸ்களை துாண்டிவிட்டு நகரத்துக்குள் நுழைந்து மனிதர்களை கொன்று வேட்டையாடி மீதி இருக்கும் மனிதர்களை சிறைப்பிடிக்கிறது.

                         இந்நிலையில் கதாநாயகனால் உயிர் பிழைத்த சீசர் நகரத்திற்குள் வந்த தனது நயவஞ்சக கூட்டாளி கோபாவை கொன்று மீண்டும் தனது கூட்டத்திற்கு தலைமை ஏற்று எப்படி அவர்களை நல்வழி படுத்துகிறான் என்பதே டான ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ் ன் கதை

                            மிகப் பொருட் செலவில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இந்த திரைப்படம் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் கவரும் வகையில் உள்ளது.

No comments:

Post a Comment